Tuesday, 8 March 2011

எங்க ஓடுறீங்க?

நான்  ஒன்னு  சொல்லுவேன்… எழுந்திருச்சு  ஓடக்கூடாது… சொல்லட்டுமா????
ஆ..சொல்லட்டுமா
????

?????

பக்கத்து
பெருமாள் கோவில்ல சுண்டல் போடுறாங்க…
ஹே…ஹே..  நில்லுங்க… எங்க ஓடுறீங்க
?…. 

காதல் எங்கே பிறந்தது

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

சீனாவுல தான் பிறந்தது….. ஏனெண்டா
Anything 'made in China' has NO GURANTEE & NO WARRANTY.

தற்கொலையா? கொலையா?

"தற்கொலை, கொலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?…"

"உங்க முகத்தை நீங்க கண்ணாடியில் பார்த்தால் அது தற்கொலை..
உங்க போட்டோவை என்கிட்ட கொடுத்து பார்க்க சொல்றது கொலை…."
 

காதல் திருமணம்

காதல் திருமணத்திற்கும் arrange marriage க்கும் என்ன வித்தியாசம்?

என் loverரை  திருமணம்  செய்வது  love  marriage. அடுத்தவரின்  loverரை  திருமணம்   செய்வது  arrange marriage.

என்ன வித்தியாசம்

Love marriage’கும் arranged marriage’கும் என்ன வித்தியாசம்???

நாமளா போய் கிணத்தில விழுந்தா
, அது Love marriage! பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது arranged marriage!!! 

வீட்டில மரியாதை

நபர்–1:- நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு  உங்க அப்பாகிட்ட கேட்டதுக்குஅந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு  சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???

நபர்–
2:- ஓகோ… உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா??? 

சொந்தக்காரங்க இருக்கிற இடம்

நபர்–1:- ஏண்டா..! நாளைக்கு  ஒரு நாள் லீவு இருக்கே. நான் எங்க சித்தி வீட்டுக்குப்  போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???

நபர்–
2:- நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…

நபர்–
1:- அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற  இடத்துக்குதானே போக முடியும்!!!.. 

வியாதி குணமாக

டாக்டர்:- உங்களுக்கு  இருக்கிற  வியாதி  குணமாகணும்னா  நீங்க  மீனும் கோழியும்   சாப்பிடறதை   நிறுத்தித்தான்  ஆகணும்.

நோயாளி :
எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்???? 

காரியம் பண்ணணும்

நோயாளியின் உறவினர்:- டாக்டர்! எனக்காக  நீங்க  ஒரு  காரியம் பண்ணணும்…!

டாக்டர்:- Sorry… நான் operation மட்டும்தான் பண்ணுவேன்…. காரியம் நீங்கதான் செய்யணும்! 

சின்ன சந்தேகம்

டாக்டர்:- ஒரு சின்ன சந்தேகம் கேட்டா தப்பா நினைக்கக் கூடாது..

நோயாளி:-
இல்ல பரவால்ல.. கேளுங்க டாக்டர் ஐயா..

டாக்டர்:- operation’க்கு அப்பறம் நான் fees’ஜ யார்கிட்ட போய் வாங்கறது??? 

பரீட்சைக்கு படித்தேன்

அப்பா:- நேத்து ராத்திரி பரீட்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்ல லைட்டே எரியல?

மகன்:-
படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!! 

தமிழிலே சொல்லுங்க

ஆசிரியர்:- உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.

பையனின் தந்தை:-
தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.

ஆசிரியர்:-
தங்கள் மகன்  ஆங்கிலத்தில்  மிகவும்  வலுவிழந்து இருக்கின்றான்ஐயா. 

ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாது

ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் போது, அவர் தலையில் ஒரு  ஆப்பிள்  விழ, அவர்  புவியீர்ப்பு  விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் :
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது… 

என்ன கொடுமை

ஒன்றுமே தெரியாத student கிட்ட question paper கொடுக்குறாங்க….

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட answer paper கொடுக்குறாங்க…

என்ன கொடுமை  சார் இது
????…. 

வடையைச் சுட்டது யார்?

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.

பாட்டி  வடை  சுட்ட கதையில
, வடையைச் சுட்டது  யார்?  பாட்டியா?? காக்காவா???

காந்தியா? நேருவா?

நேரு சொன்னார்:- சோம்பேறித்தனமே உங்கள் மிகப் பெரிய எதிரி.

காந்தி சொன்னார்:-
உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.

இப்ப சொல்லுங்க. மாமா சொல்றத கேக்குறதா
?…. இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?....

திருமணத்திற்கு முன் - திருமணத்திற்குப் பின்

(தி.மு.) திருமணத்திற்கு முன் (நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் தம்பதிகள் கதைத்தது): - 

அவன் : ஆமாம், இதற்காகத்தானே  நான் இத்தனை  நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை.

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்.

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்.

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்.

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? 

(தி.பி.) திருமணத்திற்குப் பின் (தம்பதிகள் கதைப்பது) -

கீழிருந்து மேலே படியுங்கள் 

Wednesday, 9 February 2011

தெய்வீகக் காதல்

"காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?"

"அது தெய்வீக காதலாம்".

வாபஸ்

"அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு."

"ஏன்?"

"காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிறாள்.

நேரா சொல்லுங்க

அவன் : டார்லிங் நம்ம கல்யாணம்?

அவள் : எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?

அவன்: திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.